தமிழக ஹாக்கி ஆடவர் அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி

தமிழக ஹாக்கி ஆடவர் அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி
X
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி, தமிழக ஹாக்கி ஆடவர் அணி வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி, தமிழக ஹாக்கி ஆடவர் அணி வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

இன்று இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக ஹாக்கி ஆடவர் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைச் சந்தித்த திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி தன்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து பரிசு வழங்கினார். இந்த சந்திப்பின்போது வீரர்கள் தாங்கள் வென்ற கோப்பையை கனிமொழி கருணாநிதியிடம் காட்டி மகிழ்ந்தனர்.


12 வது இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கடந்த ஏப்ரல் 6 ம் தேதி முதல் நடைபெற்றது. இதில் 27 மாநில அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. (17/04/2022) அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி அரியானா அணியை எதிர் கொண்டு விளையாடியது.

இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி மற்றும் அரியானா அணிகள் தலா ஒரு கோல் அடித்து சம நிலையில் இருந்ததால் இறுதியில் டை பிரேக்கர் நடைபெற்றது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் அரியானா அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. தமிழ்நாடு அணி இரண்டாம் இடம் பெற்றது. 22 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு அணி இறுதி ஆட்டத்தில் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story
மனிதன் கனவு கண்ட காலத்தை இயந்திரம் உருவாக்கும் காட்சி – AIன் காலச்சுவடு!