அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)

அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.

தமிழக சட்ட சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் மீது முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்து பேசி வருகிறார்.

கடந்த இரண்டு தினங்களாக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர் இந்த அரசுக்கு சொன்ன நல்ல ஆலோசனைகளாக எடுத்துக்கொள்கிறேன் என்று கூறிய அவர் கடந்த அதிமுக ஆட்சியில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!