சென்னையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

சென்னையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
X
சென்னையில் இன்று அதிகாலை முதல் 20 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்

தமிழகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சென்னை, ஆயிரம் விளக்கு, எழும்பூர், வில்லிவாக்கம், மாதவரம், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சௌகார்பேட்டையில் மருந்து ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.. சௌகார்பேட்டை ஸ்டார்ட்டன் முத்தையா முதலி தெருவில் தொழில் அதிபர் ஒருவர் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

மாதவரம் நடராஜன் நகரில் உள்ள தனியார் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தாம்பரம், குன்றத்தூர், எழும்பூர், மண்ணடி, தாம்பரம், வேப்பேரி, பூக்கடை, வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு, உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்துவருவதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடசென்னையின் பிற பகுதிகளிலும் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை நடக்கிறது. அந்தவகையில், சென்னையின் புறநகர்ப்பகுதிகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பறந்துள்ளனர்.. இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் பரபரப்பு: சென்னையில் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்கள், அந்த நிறுவனம் தொடர்பான இடங்களிலும் வருமானவரி சோதனை நடக்கிறது.. இந்த சோதனைக்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த சோதனையின் முடிவில்தான் அரசியல் காரணம் குறித்து தெரியவரும்.

சோதனையும் விசாரணையும் முழுமையாக முடிவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

விடிகாலையிலேயே ரெய்டு நடத்தப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை சென்னையில் ஏற்படுத்தி வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!