தொழில் துறையினருக்கான சலுகைகள் இன்று அறிவிக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொரோனா முழு ஊரடங்கு தொடா்பாக, தொழில் மற்றும் வணிக சங்கத்தினா்களுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் 9ம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கூறியதாவது :
கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களின் உயிர்ககளைக் காத்திடவும், பெருந்தொற்றின் பரவல் சங்கிலியை முறித்திடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முழு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், குறுகிய காலத்தில் பொது முடக்கத்தை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் ஆலோசனை நடத்த முடியவில்லை.
வரும் காலங்களில் தொழில் துறையினருடன் ஆலோசித்த பிறகே அறிவிக்கப்படும். இந்தக் கூட்டத்தில் தொழில் மற்றும் வணிக அமைப்புகள் சார்பாக ஆலோசனைகள், கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு உரிய முடிவுகள் இன்று (மே 10ம் தேதி) அறிவிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கூட்டத்தில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu