வாடகை உயர்வு இத்தனை மடங்கா? பாவம் சென்னை, பெங்களூருவில் வேலை செய்பவர்கள்!

வாடகை உயர்வு இத்தனை மடங்கா? பாவம் சென்னை, பெங்களூருவில் வேலை செய்பவர்கள்!
X
சென்னையில் 17000 ரூபாய் வாடகை வீடுகளின் தற்போதைய வாடகை 20 ஆயிரம் வரை இருக்கின்றன. பல்லாவரம், தாம்பரம் பகுதியில் 18 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது வாடகை. ஒரகடத்தில் வாடகை 13 ஆயிரம் ரூபாய்.

இந்தியாவின் முக்கிய நகரங்கள் சிலவற்றில் வாடகை வீடுகளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில், வாடகை மளமளவென உயர்ந்து காணப்படுகிறது. இனி எப்போதும் வாடகை குறையாது என்பதால் நகரங்களில் வாழும் வெளியூர் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். முக்கியமாக சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் வசித்து வரும் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

கல்யாணத்தைப் பண்ணி பாரு வீட்டைக் கட்டிப் பாரு என்று சொல்வார்கள். இப்போதெல்லாம் வீடு கட்டினால்தான் கல்யாணம் என்பது போல யாருக்கெல்லாம் சொந்த வீடு இருக்கிறதோ அவர்களுக்குதான் கொஞ்சம் சீக்கிரமாக திருமணம் நடக்கிறது. 30 வயதைக் கடந்தும் திருமணமாகாமல் பல ஆண்கள் இப்போது இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக சொந்த வீடு இல்லை என்பதைக் கூறுகிறார்கள். கை நிறைய சம்பளம் வாங்கும் வேலை இல்லாமல் இருந்தால் கூட திருமணம் ஆகின்றது. ஆனால் ஓரளவுக்கு நல்ல சம்பளம் வாங்கினாலும்கூட சொந்த வீடு இல்லை என்ற குறையை காரணமாக சொல்லி பல திருமண வரன்கள் தட்டிச் செல்வதாக கூறுகின்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து பெரும்பாலும் இளைஞர்கள் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு நகரங்களில்தான் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் ஆகாத நிலையில் பலர் ஒன்று சேர்ந்து ஒரே வீட்டில் வாடகையைப் பகிர்ந்து கொடுத்து சமாளிக்கிறார்கள். ஆனால் அதுவே திருமணமாகியும் வாடகை வீட்டில் வசிக்கும் மக்களுக்கு இப்போது உயர்ந்த வீட்டு வாடகை மிகப் பெரிய தலைவலியாக இருக்கிறது. வாங்கும் சம்பளத்தில் பாதியை வாடகைக்கே கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சொந்தமாக வீடு வாங்க நினைத்தாலும் அவர்கள் அடைக்க வேண்டிய கடன், கொடுக்க வேண்டிய வட்டி மிக அதிகமாக இருக்கும் என்பதால் சொந்த வீடு வாங்காமல் தவிர்க்கிறார்கள்.

கொரோனா வந்த காலத்தில் இரண்டு வருடங்களாக வீடுகள் காலியாக இருந்தன. பல வீடுகள் வேறு வழியின்றி வாடகையை அதிகரிக்காமல் இருந்து வந்தன. ஆனால் நிலைமை சீராகி மீண்டும் பலரும் நகரங்களில் வேலைக்கு சென்றதும் அவர்கள் வாடகையை கணிசமாக உயர்த்திவிட்டனர்.

கொரோனா நிலைமை மாறி இப்போது பல நிறுவனங்களும் நேரடியாக பணியாளர்களை அலுவலகத்துக்கு வேலைக்கு வரச் சொல்லி உத்தரவிட்டுள்ளதன் காரணமாக மீண்டும் வீட்டுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.

தாறுமாறாக உயர்ந்த வீட்டு வாடகையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆனாலும் வேறு வழியில்லாததால் அலுவலகத்துக்கு பக்கத்திலோ சற்று தொலைவிலோ ஏதாவதொரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்வதுதான் சரி என அவர்கள் அதிக வாடகைக்கு குடியேறுகிறார்கள்.

மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வாடகை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 11 முதல் 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதில் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களும் விதிவிலக்கில்லை.

கோயம்புத்தூரில் 12 ஆயிரம் வரை வாடகைக்கு விடப்பட்டு வந்த வீடுகள், இப்போது 15 ஆயிரம் வரை விடப்படுகின்றன. திருச்சி, மதுரையில் 10 ஆயிரத்துக்கு விடப்பட்ட வாடகை வீடுகள் இப்போது 12 ஆயிரம் வரை இருக்கின்றதாம்.

சென்னையில் 17000 ரூபாய் வாடகை வீடுகளின் தற்போதைய வாடகை 20 ஆயிரம் வரை இருக்கின்றன. பல்லாவரம், தாம்பரம் பகுதியில் 18 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது வாடகை. ஒரகடத்தில் வாடகை 13 ஆயிரம் ரூபாய்.

பெங்களூருவில் 22 ஆயிரம் இருந்த வாடகை வீடுகள் இப்போது 28 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகின்றனவாம். இதனால் ஐடியில் பணிபுரிபவர்களே வாடகையைக் கண்டு பயம் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை எனவும் பலர் கூறி வருகின்றனர். 20, 25 கிமீ தூரத்தில் வீடு எடுத்து தினமும் வந்து செல்லும் பலரும் இருக்கிறார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!