திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் வாட் வரி குறைக்கப்பட்டது தான் வரலாறு

திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் வாட் வரி குறைக்கப்பட்டது தான் வரலாறு
X
சட்டப் பேரவையில் முதல்வர் உரையின்போது பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது தான் வரலாறு: பிரதமரின் புகாருக்கு தமிழக நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப் பேரவையில் முதல்வர் உரையின்போது பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசியுள்ளார் என தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியின் காணொலி வாயிலான கூட்டத்தில், பெட்ரோல், டீசல் வரியை சில மாநிலங்கள் குறைப்பதற்கான வழிவகை காணவில்லை என கூறியுள்ளார். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பேசியிருக்கிறார். மத்திய அரசுக்கு முன்பே பெட்ரோல் மீதான விலையை குறைத்தது தமிழக அரசு.8 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மாநில அரசுகளை குற்றம் சாட்டுவதா? என பேரவையில் பிரதமர் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டதுதான் வரலாறு என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சரின் உரையை தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் மீதான வரி 200 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது என்றார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil