இந்து சமய அறநிலையத்துறை வேலை: 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்து சமய அறநிலையத்துறை வேலை: 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
X

இந்து சமய அறநிலையத்துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த பணிகளுக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில், நகை மதிப்பீட்டுக் குழுவில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதில் 20 பணியிடங்கள் உள்ளன. தகுதியுள்ளவர்கள் 17.11.2021க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவித்துள்ளது.

பணியின் பெயர் : இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் நகை மதிப்பிடுதலில் 5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2021 அன்று 28 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.35,400 – 1,12,400

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/87/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 119 உத்தமர் காந்தி சாலை, சென்னை – 600034.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/87/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!