20 மாவட்டங்களில் அனல் காற்று: வானிலை மையம் எச்சரிக்கை

20 மாவட்டங்களில் அனல் காற்று: வானிலை மையம் எச்சரிக்கை
X
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தரை காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசுவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 20 மாவட்டங்களில் அனல்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் இயல்பிலிருந்து 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயில் மற்றும் அனல்காற்று காரணமாக பிற்பகல் 12 மணிமுதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future