எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம்
சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக சென்னையில் நடைபெற்றது. அக்கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்த நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சி அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி கூறியதாவது,
இந்தியாவில் தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்வு இருந்து வருகிறது. தற்போது பெட்ரோல் விலை ரூ.117 ஆகவும், டீசல் விலை ரூ.107 ஆகவும் உள்ளது. ஒன்றிய அரசு சாமானியர்கள் பாதிக்கும் வகையில் பெரும் முதலாளிகளுக்கு ஆபத்தான முறையில் உதவி செய்து வருகிறது.
எண்ணெய் விலை மீது மத்திய, மாநில அரசுகள் அதிகளவில் வரிகள் விதிப்பதாலேயே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலைவாசி உயர்வை குறைக்க நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் எஸ்டிபிஐ கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும்,
திரிபுரா மாநிலத்தில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து முஸ்லீம் வெளியேற்றும் பாஜக அரசை எஸ்டிபிக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவற்றை தடுப்பதற்காக இந்திய சமூகத்திற்கு எஸ்டிபிஐ கட்சி அழைப்பு விடுக்கிறது எனவும்,
பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தேவாலயங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதனால் நாட்டில் கிறிஸ்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே இருந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
கடந்த ஒரு ஆண்டாக டெல்லி அருகே உள்ள திக்ரி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதனால் 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்காமல் பிடிவாதமாக பெரும் முதலாளிகளுக்கு வசதிகளை செய்து வருகிறது. தொடர்ந்து வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை பாராட்டுவதோடு மட்டுமில்லாமல் போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் முழு ஆதரவு இருக்கும் எனவும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் அகில இந்திய துணை தலைவர்கள் தெகலான் பாகவி, ஷர்புதின் அகமது, நாஸ்னி பேகம் உட்பட பல்வேறு மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu