ஆளுநர் உரை ஒரு டிரெய்லர்தான், மீதியை பார்க்க பொறுத்திருங்கள் : சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)
தமிழகத்தின் 16-ஆவது சட்டப் சபையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 21ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சபையில் ஆளுநர் உரையின் மீதான விவாதங்கள் நடைபெற்றது. திமுக தேர்தலில் கூறிய முக்கியமான எதுவும் அளுநர் உரையில் இடம் பெறவில்லை என எதிர்கட்சிகள் விமர்சித்தன.
தமிழக சட்ட சபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றி வருகிறார்.
திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆளுநர் உரை ஒரு டிரெய்லர்தான், மீதியை பொறுத்திருந்து பாருங்கள். ஆளுநர் உரையில் அரசின் ஓராண்டு கால செயல்திட்டங்கள் மட்டுமே இடம்பெறும். ஐந்தாண்டு காலத்தில் செயல்படுத்தவுள்ள அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது.
எங்களுக்கு வாக்களித்தவர்கள், எங்களுக்கு வாக்களித்ததற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையிலும், எங்களுக்கு வாக்களிக்காதவர்கள், திமுகவுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருந்தும் வகையிலும் எங்களது பணிகள் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வராக இருந்த போது கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமியின் கைகளை யாரும் கட்டிவைக்கவில்லை.
திமுக பதவியேற்ற போது தமிகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. கொரோனா தொற்று அதிகரித்து, ஆக்ஸிஜன் வசதி இல்லை, தேவையான படுக்கை வசதி இல்லாத நிலையில்தான் திமுக ஆட்சிக்கு வந்தது.
திமுக வந்ததும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இல்லை, இல்லை என்ற வார்த்தைகளை இல்லாமல் ஆக்கியுள்ளோம்.
திமுக பதவியேற்ற பிறகு அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையில் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu