முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று துவங்குகிறது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல்  சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று துவங்குகிறது
X

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் (பைல் படம்)

16வது சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதியேற்றார். அவரின் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது.

ஒவ்வொறு ஆண்டு தொடக்கத்தில் கூடும் முதல் சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது மரபு, அதன்படி இன்று திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு காலை 9.55 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை தருவார். அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகிய இருவரும் வரவேற்பர். ஆளுநருடன் அவரது செயலாளர் ஆனந்தராவ் வி.பட்டிலும் வருவார்.

சட்டமன்ற கூட்டத் தொடருக்கு வரும் ஆளுநர் நேராக சபாநாயகர் இருக்கைக்கு செல்வார், அவையில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வணக்கம் தெரிவித்து வரவேற்பார்கள்.

இதனைத் தொடர்ந்து 10 மணி அளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையை சட்டசபையில் துவக்குவார். அவர் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். சுமார் இந்த உரை 2 மணிநேரம் இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் ஆளுநர் உரையை சபாநாயகர் தமிழில் ஆற்றுவார்.

இத்துடன் முதல்நாள் கூட்டம் முடிவடையும். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவலர் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் சட்டசபையில் உள்ள அனைத்து கட்சிகளின் பிரநிதிகள் கலந்து கொள்வார்கள்.

கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டசபையில் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. இதில் ஆளுங்கட்சி, எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் பேசுவார்கள்.

இறுதி நாளில் நிறைவு பேச்சாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவார். இவ்வாறு நடைபெறும் சட்ட பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லாதவர்கள் மட்டுமே கூட்டத்தில் அனுமதிக்கப்படுவர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil