முன்னணி ஹீரோக்கள் படமா? போடு பணத்தை : உதயநிதி ஸ்டாலின் உஷார்..!

முன்னணி ஹீரோக்கள் படமா?  போடு பணத்தை : உதயநிதி ஸ்டாலின் உஷார்..!
X
அரசியல், நடிப்பு, சினிமா தயாரிப்பு என பிஸியாக இருந்தாலும், உதயநிதி சினிமா வணிகத்தில்தான் அதிகம் கவனம் செலுத்தி வாராராம்.

அரசியல், நடிப்பு, சினிமா தயாரிப்பு என்று நாளைய முதல்வர் உதயநிதி பிஸியாக இருந்தாலும், உதயநிதி சினிமா வணிகத்தில்தான் அதிகம் கவனம் செலுத்தி வாராராம். உதயநிதியோட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் முன்னதாக, ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த, அஜித்தின் வலிமை ஆகிய படங்களின் திரையரங்க உரிமையை வாங்கி வெளியிட்டுச்சு.

இதைத் தொடர்ந்து, கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம், விஜய்யின் பீஸ்ட் படங்களின் திரையரங்க உரிமையை பெற்றுள்ளது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இதன் மூலம் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் திரையரங்க உரிமைகளை கைப்பற்றியுள்ளது.

இதனால், முன்னணி ஹீரோக்களின் படம் என்றால் உதயநிதிதான் வாங்குகிறார் என்ற தோற்றம் உருவாகியுள்ளது.

2021 முதல் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்ட திரைப்படங்கள்:

அண்ணாத்த

அரண்மனை

எப்.ஐ.ஆர்

எதற்கும் துணிந்தவன்

ராதே ஷ்யாம்

காத்துவாக்குல ரெண்டு காதல்

பீஸ்ட்

விக்ரம்

டான்

இந்த நிலையில், மற்ற தயாரிப்பாளர்கள், முன்னணி ஹீரோக்கள் படங்களை எல்லாம் உதயநிதியே வாங்கினால், நாங்கள் எல்லாம் என்ன செய்வது என்று புலம்பத் தொடங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், உதயநிதி ஒரு சினிமா தயாரிப்பாளராக இந்த படங்களை வாங்கி வெளியிடுகிறார். அதுமட்டுமின்றி அவர்கள் வெளியிடும் திரைப்படங்கள் மட்டும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகிறது என்ற சர்ச்சையும் உள்ளது.

அதே சமயம் பீஸ்ட்டுடன் வெளியாகும் கேஜிஎஃப் சாப்டர் 2 விற்கு வெறும் 250 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்ததும் இவர்களின் சதி என்று சமுக வலைதளங்களில் வாதம் செய்கின்றனர் ரசிகர்கள்.

இதே போல, மற்ற நிறுவனங்கள் முன்னணி ஹீரோக்களின் படங்களை வாங்கி வெளியிட்டால் அப்போதும் இப்படி சொல்வார்களா என்று உதயநிதிக்கு ஆதரவான குரல்களும் எழுகின்றன.

கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் இதே போல மாறன் சகோதரர்கள் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியபோது எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. அதே போல, இப்போது உதயநிதி மூலம் எழுவதாகச் சொல்றாய்ங்க

எப்படியாக இருந்தாலும், உதயநிதி மானாவரியாக படங்களை வளைத்துப்போடுவதால் சர்ச்சைகள் முளைவிட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாத் தெரியுது.

Tags

Next Story