பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு-சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

Dr. சுப்பையா கொலை வழக்கில் இன்று (04.08.2021) தீர்ப்பு வழங்கிய முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி என்பவர், குற்ற சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ளார். அரசுதரப்பில் அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதி தண்டனை விவரம் பற்றி இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பார். தற்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் விஜயராஜ், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று வாதாடிக் கொண்டிருக்கிறார்.
பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகள் என சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் நரம்பியல் மருத்துவர் சுப்பையா. இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்த சம்பவம் குறித்து சுப்பையாவின் உறவினர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் போலீஸார், ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம் மற்றும் வழக்கறிஞர் பாசில், வில்லியம் மற்றும் மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்து வந்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், இறுதி வாதங்கள் முடிந்து, இந்த வழக்கில் ஆகஸ்ட் 2 -ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 2 ஆம் தேதி இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம்சாட்டப்பட்ட மேரிபுஷ்பம், பொன்னுசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் இன்று அறிவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சற்றுமுன் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகள் என சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu