சென்னையில் இன்று மட்டும் மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு

சென்னையில் இன்று மட்டும் மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு
X

பைல் படம்.

சென்னையில் இன்று மாலை நெரிசல்மிகு நேரங்களில் மெட்ரோ இரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மாலை நெரிசல்மிகு நேரங்களில் மெட்ரோ இரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, இன்று (11.08.2023) மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, மெட்ரோ இரயில் பயணிகள் நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இயக்கப்படும் மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று (11.08.2023) மட்டுமே.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!