சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவு இன்று வெளியீடு
X
2021 டிசம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகளை இன்று சென்னை பல்கலைக்கழகம் வெளியிடுகிறது

தமிழகத்தில் கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா குறைந்த நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்படி பள்ளி, கல்லூரிகளில் முறையாக வகுப்புகள் மீண்டும் நடத்தப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

2021 டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகளை இன்று சென்னை பல்கலைக்கழகம் வெளியிடுகிறது. மாலை 6 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
highest paying ai jobs