தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்: நாளை இணைய வழியில் நடைபெறுகிறது
சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நாளை (06.10.2021) காலை 10.30 மணி முதல் 1.30 மணி இணையவழி பயிற்சி தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண் / பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்.
முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவுசெய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.
அடுத்த கட்டமாக திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி அல்லது தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் அரசு வழங்கும் மான்ய திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன்மூலம் நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். திட்டங்கள் மூலம் நிதி உதவி பெறும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியாளர்' திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். இப்பயிற்சிகளில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையங்களும் இணைந்து செயல்படும். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்ததுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு: தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் எண்: 044-22252081, 22252082, 8668102600, 9444557654
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu