சென்னையில் மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

சென்னையில் மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
X

பிரேக் பிடிக்காததால் பிளாட்பாரத்தில் ஏறிய மின்சார ரயில் 

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளானது

பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியதில் ரயில் பெட்டிகள் சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தில் ரயிலின் ஓட்டுநர் காயம் அடைந்தார்.

கடற்கரை ரயில் நிலையம் எப்போது பரபரப்புடன் காணப்படும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயணிகள் கூட்டம் வார நாட்களை விட இன்று சற்று குறைவாக இருந்தது. நல்வாய்ப்பாக ரயிலில் யாரும் இல்லாததால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

Tags

Next Story
ai in future education