சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து

சென்னை கடற்கரை – தாம்பரம்  மின்சார ரயில்கள் இன்று ரத்து
X

சென்னை மின்சார ரயில். (கோப்பு படம்)

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் பராமராப்பு பணி காரணமாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 44 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான மின்சார ரயில்கள் இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை இடையே காலை 10.05 மணி முதல் மதியம் 3.30 மணி வரையும், செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரையில் காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரையில் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மறுமார்கமாக பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்மளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!