உள்ளாட்சித் தேர்தலை நடத்த 6 மாத கால, அவகாசம் கேட்குது தமிழக தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தலை நடத்த 6 மாத கால, அவகாசம் கேட்குது தமிழக தேர்தல் ஆணையம்
X

சுப்ரீம் கோர்ட் பைல் படம்

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதி மன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டை பிரித்து, செங்கல்பட்டு மாவட்டமாகவும், வேலூரில் இருந்து ராணிப்பேட்டையை பிரித்து, ராணிப்பேட்டை மாவட்டமாகவும், அதேபோல் வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்த திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டமாகவும் உருவாக்கப்பட்டது.

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி பிரிக்கப்பட்டு, கள்ளிக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு புதிதாக உருவான மாவட்டங்கள், மற்றும் தாய் மாவட்டங்கள் என 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலை கட்டாயம் செப் 15ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து 9 மாவட்டங்களிலும் வாக்காளர் இறுதி பட்டியல் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் தமிழக மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தி இருந்த நிலையில், அவகாசத்தை நீட்டிக்கக்கோரி புதிய இடைக்கால மனுவை தமிழக மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ள

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!