9 மாவட்ட சேர்மன், துணை சேர்மன், துணைத் தலைவர் தேர்தல்: இன்று நடைபெறுகிறது

புதிதாக உருவான 9 மாவட்டத்தில் இன்று சேர்மன், துணை சேர்மன், ஊராட்சி துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடைபெறுகிறது.

தமிழ கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட் டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல், 28 மாவட்டங் களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான தற்செயல் தேர்தல்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப் பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத் தம் 27,792 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தொடர்ந்து அக்டோபர் 6, 9 ஆகிய 2 கட்டமாக தேர் தல் நடந்தது. இந்த தேர்த லில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்கள் 20ம் தேதி பதவியேற்றனர்.

இந் நிலையில் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர், ஊராட்சி ஒன் றியகுழு தலைவர் மற்றும் துணை தலைவர், கிராமஊராட்சி துணை தல வர் பதவிகளுக்கு இன்று காலை மறைமுக தேர்தல் நடக்கிறது.

இந்த மறைமுக தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அவர்களை மறைமுகமாக வாக் ளித்து தேர்ந்தெடுப்பர். இதற்கிடையே மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர்,கிராம ஊராட்சி வார்டு உறுப் பினர்கள் வெற்றி பெற்ற பின்னர் பதவிப் பிரமா ணம் செய்யாமல், இருந் தால் அவர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்த பின்னர் தலைவர், துணை தலைவர் மறைமுக தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அவ்வாறும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளாதவர்கள், 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் படி அவரது பதவிக்காலம் துவங்குகிற நாளான 20.10.2021ல் இருந்து மூன்று மாதங்களுக்குள்ளாகவோ அல்லது முதல் மூன்று கூட்டங்களில் ஒன்றிலோ இதில் எது முந்தையதோ அதற்குள்ளாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மறைமுக தேரதல் நடக்கும் இடங்க ளில் பிரச்னையை தடுக்கும் வகையில் போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!