நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அரசியல் பண்பாடு இல்லை: ஜெயக்குமார்

நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அரசியல் பண்பாடு இல்லை: ஜெயக்குமார்
X
முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை கட்டுப்படுத்தவில்லை என ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்


சிவந்தி ஆதித்தனாரின் 86 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, எழும்பூரில் உள்ள மாலை மலர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ,அவரது உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலக்கியம், பத்திரிகை என பன்முகத் தன்மை கொண்டவர் சிவந்தி ஆதித்தனார் என்றும், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர் எனவும் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, அரசியல் பண்பாடு இருக்கிறதா என்பது சந்தேகமாக உள்ளது. எந்தவொரு கட்சியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். ஆனால் முதலமைச்சர், நிதியமைச்சரை கட்டுப்படுத்தவில்லை.

மேலும் அதிமுக ஆட்சியில் இருந்த போது வியாபாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை, மத்திய அரசிடம் வலியுறுத்தி ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலம் நிறைவேற்றியது. இதனால் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் எந்த வித போராட்டமும் நடத்தவில்லை. மாநிலத்திற்கு தேவையானவற்றை மத்திய அரசிடம் வலியுறுத்தி பெற்றோம். அதுமட்டுமின்றி எந்தவொரு விவரமும் தெரியாமல் பழனிவேல் தியாகராஜன் பேசி வருகிறார். தான் 30க்கும் அதிகமான ஜி‌எஸ்‌.டி கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். ஒரே ஒரு கூட்டத்தில் மட்டுமே தான் கலந்து கொள்ளவில்லை. அன்றைக்கு தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தேன்.

அதுமட்டுமின்றி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை "வளைகாப்பு தியாகராஜன்" என்று

விமர்சனம் செய்த ஜெயக்குமார், சொந்தக் கட்சிக்காரரான டி..கே..எஸ். இளங்கோவனையே விமர்சனம் செய்கிறார், இது போன்ற விமர்சனங்கள் யாரும் வைத்தது இல்லை. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, திமுக ஆட்சியில் ஜனநாயக படுகொலை தான் நடக்கும். வன்முறைய கட்டவிழ்த்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன . இந்நிலையில் ஜனநாயக ரீதியில் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை, கட்டமைப்பை உருவாக்குவதில் திமுக தோற்றுவிட்டது. தற்போது தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது. ரௌடிகளின் ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது.எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!