மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்களை கல்வி அமைச்சர் வழங்கினார்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்களை கல்வி அமைச்சர் வழங்கினார்
X

சென்னை எழும்பூர் மாதிரி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்களை பள்ளி கல்வி துறை அமைச்சர் வழங்கினார்.

சென்னை எழும்பூர் மாநில மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக மாற்றுத்திறன் மாணவச் செல்வங்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் , ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் காமராஜ், பள்ளிக்கல்வி உயர் அலுவலர் அருள்முருகன் மற்
றும் மாணவர்கள், மாற்றுத்திறன் பயிற்றுனர்கள்,பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!