சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வேகமாக காலியாகும் படுக்கைகள்!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வேகமாக காலியாகும் படுக்கைகள்!
X

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை.

சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்துவருவதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக காலியாகி வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை புரட்டி எடுத்து வருகிறது. சென்னையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. இதனால் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் எற்படுத்தப்பட்டன.

இந்தநிலையில் கடந்த இரு தினங்களாக கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்துவருகிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் தினசரி பாதிப்பு 7,500 என்று இருந்த நிலை மாறி, மார்ச் 22ம் தேதி 2,985 என்று குறைந்தது. அன்றிலிருந்து 3000த்தை கூட தாண்டாமல் உள்ளது.

சென்னை ராஜீகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 2050 படுக்கைகளில் தற்போது 1455 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். மற்ற 595 படுக்கைகள் காலியாகி உள்ளன. முழு ஊரடங்கினால் ஏற்பட்டுளள் நல்ல முன்னேற்றம் என்றே இது கருதப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!