இந்திய அளவில் பெண்களுக்கான ஃபென்சிங் தரவரிசை தேர்வு போட்டி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்திய அளவிலான பெண்கள் ஃபென்சிங் லீக் மற்றும் தரவரிசை தேர்வுக்கான போட்டிகள் நடைபெற்றது.
கேலோ இந்தியா சார்பில் பெண்கள் வாள்வீச்சு லீக் மற்றும் தரவரிசை மூன்றாம் கட்ட போட்டி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
இந்திய விளையாட்டு ஆணையம் , கேலோ இந்தியா ஆகியவற்றின் கீழ் இந்திய பென்சிங் சங்கம் பெண்களுக்கான லீக் மற்றும் வாள்வீச்சு தரவரிசை போட்டிகளை மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
தேசிய சாம்பியன்ஷிப்பிற்கான தரவரிசை முறையை அறிமுகப்படுத்தும் மூலம் நாட்டில் ஃபென்சிங்கிற்கான கட்டமைப்பை FAI அறிமுகப்படுத்துகிறது.
இன்று முதல் துவங்கும் இந்தப் போட்டி மூன்று நாட்கள் நடைபெறும். எபி , பாயில் , சேபர் என மூன்று பிரிவுகளின் கீழ் 350 க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் 35 மாநிலங்களிலிருந்து வருகை புரிந்து போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெறும் வீராங்கனைகள் அனைவருக்கும் தொடர்ச்சியாக சிறப்பான பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெற்றி பெறும் இவர்களுக்கு ரூ50 ஆயிரம் , ரூ40 ஆயிரம் இரு வீராங்கனைகளுக்கும் , ரூ10 ஆயிரம் 4 வீராங்கனைகளும் ஊக்க தொகையாக அரசு சார்பில் வழங்கப்படும்.
முதல் கட்டமாக டெல்லியிலும் , இரண்டாவது கட்டமாக கட்டாக்கிலும் இந்த போட்டிகள் நடைபெற்று , தற்போது மூன்றாம் கட்ட போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது.
இந்த போட்டியினை தமிழ்நாடு தொழில் வரி துணை ஆணையாளர் ஹரிசங்கர் தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரிவிலும் வயது அடிப்படையில் இந்தப் போட்டி நடைபெற்று தரவரிசை வீரராங்கனைகள் தேர்வு செய்யப்படுபவர். போட்டியின் நடுவராக 25 நபர்கள் நியமிக்கப்பட்டு போட்டிகள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.
இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை இயக்குனர் மோகித் அஸ்வின் , சேர்மன் தனசேகர் , கன்வீனர் கருணாமூர்த்தி , உறுப்பினர்கள் குமார் , கிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu