மழைநீர் வடிகால் அமைப்பில் அதிமுக அரசு ஊழல்:எம்பி தயாநிதிமாறன் குற்றச்சாட்டு
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியால் தான், தற்போதும் சென்னையில் ஒரு நாள் பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் சென்னை அம்மா மாளிகையில் இன்று நடந்தது. மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜே.ஜெயராணி, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் கூறுகையில், அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, அவரவர் பகுதிகளில் முடிவு பெறாமல் உள்ள திட்டங்களை உடனடியாக முடிக்க வேண்டும் என்றும் மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மத்திய அரசு அளிக்கின்ற நிதி குறித்து ஆராயும் கூட்டமாக இது அமைந்ததாகவும், தற்போது வரை மத்திய அரசு வழங்கிய நிதிகள் உரிய முறையில் செலவழிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளின் அவல நிலை ஆட்சியால் தான், தற்போது சென்னையில் ஒரு நாள் பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியுள்ளது என்று குற்றஞ்சாட்டினார். அதன் பிறகு பேசிய மாநகராட்சி ஆணையர் ககன் திப் பேடி கூறும்போது, 3 திட்டங்கள் கீழ் சென்னையில் மழை நீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், அதேபோல் முடிவுபெறாத திட்டங்களை உடனடியாக முடிக்க நடவடிக்கைவும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்நிலையில் எதிர்வரும் பருவமழைக்கு முன்னதாகவே, சென்னையில் மழை நீர் தேங்காத வகையில் தூறுவாறும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu