முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு - சட்டசபையில் ஆளுநர்

முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு - சட்டசபையில் ஆளுநர்
X

தமிழக பொருளாதார ஆலோசனைக் குழு ரகுராம் ராஜன் (பைல் படம்)

தமிழக சட்டபேரவை கூட்டம் இன்று தொடங்கியது. இதில் ஆளுநர் உரையாற்றி வருகிறார். அந்த உரையில் தமிழக பொருளாதார இலக்கை எட்ட, முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

16 வது சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு இன்று புதிய சட்ட பேரவையின் முதல் கூட்டத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைத்தார்.

அப்போது அவர் தமிழகத்தின் பொருளாதார இலக்கை எட்ட ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலாளர் டாக்டர் எஸ்.நாராயணன் மற்றும் ஜீன் ட்ரெஸ் ஆகியோரைக் கொண்ட பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்

Tags

Next Story
ai marketing future