மெட்ரோ ரயில் பணி: மெரீனா சாலையில் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணி: மெரீனா சாலையில் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்
X

சென்னை மெரினா கடற்கரை

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, மெரீனாவில் ஒரு ஆண்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது

சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் பகுதியில் காந்தி சிலைக்கு பின்புறம் 7.02 மீட்டா் அகலத்தில், 480 மீட்டா் நீளத்தில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் ஜூலை 6-ம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி லூப் சாலை, காமராஜா் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரீனா கடற்கரை இணைப்பு சாலை வழியாக போர் நினைவுச் சின்னம் நோக்கி செல்ல தடை செய்யப்படுகிறது. மாறாக அந்த வாகனங்கள், காமராஜா் சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

போர் நினைவு சின்னத்திலிருந்து வரும் வாகனங்கள் மெரீனா கடற்கரை இணைப்பு சாலை வழியாக கலங்கரை விளக்கம் நோக்கி செல்ல தடை செய்யப்படுகிறது. இந்த வாகனங்கள் காமராஜா் சாலை வழியாக சென்று அவா்கள் இலக்கை அடையலாம்.

கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரீனா கடற்கரை இணைப்பு சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள், காந்தி சிலைக்கு பின்னால் தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம். அதன் பிறகு முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

போர் நினைவுச் சின்னத்தில் இருந்து மெரீனா கடற்கரை இணைப்பு சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம். அதன் பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil