உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள்: காசிமேடு துறைமுகத்தை தூய்மைபடுத்திய திமுகவினர்

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள்: காசிமேடு துறைமுகத்தை தூய்மைபடுத்திய திமுகவினர்
X

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வார்பு பகுதியில் இருந்த நச்சு கழிவுகளை தூய்மை செய்யும் திமுகவினர்.

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சுற்றுசூழல் அணியினர், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தூய்மை செய்தனர்.

திமுகவின் இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சுற்றுசூழல் அணியின் சார்பில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வார்பு பகுதியில் இருந்த நச்சு கழிவுகளை கடலில் இறங்கி திமுகவினர் தூய்மை செய்தனர்.


2 மூழ்காளிகள் கடலில் இறங்கி வார்பு பகுதியில் இருந்த நச்சு கழிவுகளை எடுத்து கூடைகள் மூலம் வெளியேற்றப்பட்டன. இதில் பிளாஸ்டிக் பொருட்கள், வலைகள் மற்றும் கழிவு பொருட்கள் கடலில் இருந்து எடுக்கப்பட்டன.

திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆலோசனைப்படி, சென்னை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் லையன் எம் தீனதயாளன் தலைமையில் ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜேஜே எபினேசர் முன்னிலையில் கடலில் இறங்கி வார்பு சுத்தம் செய்து செய்யும் பணி தொடங்கியது. இதில் வடசென்னை மாவட்ட பொறுப்பளார் தா.இளைய அருணா மற்றும் மாநில துணை செயலாளர்.பழ செல்வ குமார் உட்பட பலர் இந்த நச்சு கழிவுகள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture