வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் : ஆர்வத்துடன் விருப்ப மனு

வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட  அ.தி.மு.க.வினர் : ஆர்வத்துடன் விருப்ப மனு
X
அதிமுகவினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.
வட சென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட அதிமுகவினர் ஆர்வத்துடன் நகர்ப்புற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாநகராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அ.தி.மு.க தலைமை கழகம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று பல பகுதிகளில், அண்ணா தி.மு.க.வினர் விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சி மன்ற தேர்தலில் முதல் நாளான இன்று தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி 41 வது வார்டில் போட்டியிட மேற்கு பகுதி செயலாளர் ஆர்.நித்தியானந்தம், 42 வது வார்டுக்கு பகுதி செயலாளர் சீனிவாச பாலாஜி, வண்ணை கணபதி, பெரம்பூர் தொகுதி 44 வது வார்டுக்கு தெற்கு பகுதி செயலாளர் வியாசை எம்.இளங்கோவன்,

36 வது வார்டுக்கு மேற்கு பகுதி செயலாளர் என்.எம். பாஸ்கரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் து.சம்பத், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் இ.எஸ்.சதீஷ் பாபு, வட்ட செயலாளர் லயன் ஜி.குமார், மற்றும் வட்ட செயலாளர் வி.பொன்முடி, பொதுக்குழு உறுப்பினர் கே.செல்வராணி, இ.சுமலதா, கடல்ராஜன், உள்ளிட்ட பலர் வண்ணாரப்பேட்டை டி.எச்.ரோடு பகுதியில் உள்ள வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷிடம் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஆர்.கே.நகர் பகுதியில் 38,40,41, வார்டுகள் பொது வார்டாகவும் 43,39,42, வார்டுகள் பெண்களுக்கான வார்டாகவும் 47 வது வார்டு ஆதிதிராவிடர் என 7 வார்டாகவும், பெரம்பூர் தொகுதியில் 35,36,37, பொது வார்டாகவும் 34,46,44, பெண்கள் வார்டாகவும் 45 வது வார்டு ஆதிதிராவிடர் என ஆர்.கே.நகர், பெரம்பூரில் 14 வார்டுகளில் போட்டியிட அ.தி.மு.க. வினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!