ஆர்.கே.நகரில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக நிவாரணம் வழங்கவில்லை: அதிமுக குற்றச்சாட்டு
ஆர்.கே.நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அதிமுக மாவட்ட செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
தொடர் மழை காரணமாக ஆர்.கே.நகரில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதியில் பார்வையிட்ட வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், தி.மு.க. அரசால் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
கடந்த நான்கு நாட்களாக இடைவிடாத பெய்த மழையினால் ஆர்.கே.நகர் பகுதிக்கு உட்பட்ட 41 வது வட்டம், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதை தொடர்ந்து அப்பகுதியில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், நேரில் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்து மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பத்திரிகையாளர்களிடம் ஆர்.எஸ். ராஜேஷ், பேசிய போது..
பத்து ஆண்டுகளாக நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் டெல்டா மாவட்டம், மற்றும் கடலோர மாவட்டங்களில் பேரிடர்கால பணிகளில் ஏற்படக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முழுவீச்சில் ஈடுபட்டு மக்கள் பணிகளுக்கென முன்மாதிரி மாநிலமாக விளங்கியது தமிழகம்.
கடந்த ஆட்சி காலத்தில் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டதை இன்றளவும் இப்பகுதி மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, எழில் நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதை யொட்டி
வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மக்கள் பணிகளை முன்னிறுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில்ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் ஆங்காங்கே சாக்கடை அடைப்புகள் ஏற்பட்டு மழைநீருடன் கழிவுநீரும் கலந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஆனால் இன்றைய ஸ்டாலின் அரசு பொறுப்பேற்றும் தொடர் மழை காரணமாக இப்பகுதியில் இரண்டு சதவிகித மீட்பு பணிகள் கூட இன்னும் நடைபெறவில்லை. அரசு இயந்திரங்கள் முடங்கியுள்ளது,
கொருக்குப்பேட்டை பகுதியில் மழை வெள்ளத்தை பார்வையிட்ட ஸ்டாலின் ஏன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் வந்து குறைகளை கேட்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
மழைநீரை அகற்ற அரசு பாரபட்சம் பார்க்காமல் உடனடியாக ஆர்.கே.நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இயந்திரங்கள் மூலம் மழைநீரை வெளியேற்றுதல்,
மக்களுக்கு உணவு, மற்றும் நிவாரண உதவிகள் வழங்குதல், குடிநீர், மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், மழைநீர் புகுந்த இருப்பிடங்களில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக மீட்டு பள்ளிகளில் தங்க வைத்தல் உள்ளிட்ட பணிகளில் உடனடி நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என அப்போது தெரிவித்தார்.
இதில் சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் எம்.சேவியர், மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், மாவட்ட நிர்வாகி எஸ்.முத்து செல்வம், பி.வெங்கடேசன்,
பகுதி செயலாளர்கள் ஆர்.நித்தியானந்தம், சீனிவாச பாலாஜி, வட்ட செயலாளர்கள், ஏ.வினாயகமூர்த்தி, பி.கே.யுவராஜ், வேல்முருகன், எம்.ராமமூர்த்தி, நாகூர் மீரான், லயன் ஜி.குமார், வி.கோபிநாத், எஸ்.சுயம்பு, ஆர்.அருள், ஏ.கே.சந்திரசேகர், ஸ்பீடு பாண்டி, பி.கோவிந்தராஜ், நரேஷ்குமார், மற்றும் பகுதி, வட்ட பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu