தமிழக கவர்னருடன் ரஜினி திடீர் சந்திப்பு
திடீர் சந்திப்பு
அரசியலுக்கு வருவார் என தமிழக முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சட்ட சபை தேர்தலின்போது நான்அரசியலுக்கு வரவில்லை என திடீரென்று அறிவித்தார்.
ஆனால் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தேர்தல் வரும்போது களத்தில் இறங்குவோம் என அவரது ரசிகர்களுக்கு சொல்லி ஆறுதல் படுத்தினார்.ஆனால் நடிகர் கமல் ஹாசன் கட்சியின் பெயரை அறிவித்து அரசியலில் குதித்து தற்போது வரை கட்சியை வழிநடத்தி வருகிறார். ஆனால் நடிகர் ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவார் என சூளுரைத்த பலர் திடீரென்று ரஜினி பின் வாங்கிய பின் காணாமல் போய்விட்டனர்.
தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என பல அரசியல் நோக்கர்கள் தெரிவித்தாலும் திடீரென்று இப்படி அறிவித்தது ஏன்? என்ற கேள்விக்கு இன்று வரை பலருக்கும் பதில் கிடைக்காத நிலையே நீடிக்கிறது.
ஒவ்வொரு தேர்தலின்போது வாய்ஸ் கொடுப்பார். ஆனால் கடந்த தேர்தலைப்பொறுத்தவரை எந்த கட்சிக்கு ஆதரவாகவும் ரஜினி பேசாமல் மவுனமாக இருந்துவிட்டுஓட்டு மட்டும் போட்டார்.அண்மையில் புதுடில்லி சென்று வந்த நிலையில் இன்று திடீரென தமிழக கவர்னர் ரவியை நேரில் சென்று சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சந்திப்பிற்கு பின்னர் கவர்னருடன் அரசியல் குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும் கவர்னர் ஆன்மீக விஷயத்தில் அக்கறை கொண்டவராக இருப்பதால் தமிழக மக்களுக்கு நல்லதைத்தான் செய்வார் எனவும் அவர் தெரிவித்தார். மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா? என கேட்டதற்கு அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் இல்லை என தெரிவித்தார். கவர்னருடன் பேசியது குறித்து கேட்டதற்கு அதனை இப்போது கூறமுடியாது என தெரிவித்தார். ஜிஎஸ்டி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஜெயிலர் படப்பிடிப்பு 15 அல்லது 22 ந்தேதி துவங்கும் என அவர் தெரிவித்தார்.தமிழகத்தில் அரசியலுக்கு வராமல் திடீரென டில்லி சென்றுவிட்டு திரும்பிய சூப்பர் ஸ்டார் கவர்னரை நேரில் சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu