சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்! எப்ப இருந்து ஓடப்போகுது தெரியுமா?
சென்னை மாநகரில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள் ஓடப் போகிறது. சென்னையின் குறிப்பிடத்தகுந்த அடையாளங்களில் ஒன்று டபுள் டெக்கர் பேருந்துகள். சென்னைக்கு சென்றால் மெரினா பீச், கடற்கரை ரயில், மின்சார ரயில்களில் பயணம் செய்தீர்களா என்று கேட்பது போல இப்போது மெட்ரோ ரயிலில் போனீர்களா என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு முன்னர் சிறப்பாக இருந்தது இந்த டபுள் டெக்கர் பேருந்துகள்.
ஜெயம் ரவி, ஜெனிலியா நடித்த அடடா அடடா பாட்டில் கூட இதுபோன்ற ஒரு மொட்டைமாடி பஸ் வரும். ஆனால் இது டபுள் டெக்கர் பேருந்து. அதாவது மேலே ஒரு பஸ், கீழே ஒரு பஸ் இரண்டுக்கும் ஒரு ஓட்டுநர், இரண்டு நடத்துனர்கள் என இருக்கும். இதன்மூலம் பேருந்துக்குள் நெரிசலை வெகுவாக குறைக்க முடியும் என அரசு நம்புகிறது.
டபுள் டெக்கர் பேருந்துகள் மாடிப் பேருந்துகள் என்றும் அழைக்கப்படுகிறது. இவை 1997ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை சென்னை மாநகரில் வலம் வந்தவைதான். ஆனால் அதன் பிறகு பல மேம்பாலங்களின் கீழே செல்ல இடையூறாக இருக்கும் உள்ளிட்ட சில காரணங்களால் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் இதுபோன்ற மாடிப் பேருந்துகளை விரைவில் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தில் திருப்தியடைந்த அதிகாரிகள் இதுபோன்ற பேருந்துகளை மின் கம்பிகள் இல்லாத, தாழ்வான மரங்கள் இல்லாத சாலைகளான அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சாலைகளில் இயக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளனராம்.
விரைவில் சென்னை சாலைகளில் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu