சென்னையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்துறை போட்டிகள்
கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட, 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட மாநில அளவிலான கலைப்போட்டிகளை, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை நடத்தி வருகிறது.
அதன்படி, குரலிசை , கருவியிசை , பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று (15.05.2022) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் நடைபெற்ற குரலிசைப்போட்டியில் முதல் பரிசு ஸ்ரீ ஸ்வராத்மிகா, இரண்டாம் பரிசு வி. முகுந்த சாய், மூன்றாம் பரிசு நா. ரித்திக்கேஷ்வர், கருவியிசை போட்டியில் முதல் பரிசு பி. வெண்ணிலா(வயலின்),
இரண்டாம் பரிசு கா. கார்த்திக் பாலாஜி(மிருதங்கம் )
மூன்றாம் பரிசு கி. லவ் அய்யங்கார் (புல்லாங்குழல்),
பரதநாட்டியம் போட்டியில் முதல் பரிசு எஸ். சஹானா,
இரண்டாம் பரிசு ப. கிருஷ்ணப்பரியா, மூன்றாம் பரிசு பி. ஸ்ருதி, கிராமிய கலை போட்டியில் முதலாம் பரிசு நா. ராஜன் (கரகம் தப்பாட்டம் )
இரண்டாம் பரிசு சு.வி. ரமணன்(கரகம் ) மூன்றாம் பரிசு அ. தமிழ் செல்வன் (பறை) ஆகியோர் பெற்றனர்.
கவின் கலைக்கல்லூரியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதலாம் பரிசு கு. பவித்ரா, இரண்டாம் பரிசு சி. கார்திக்ராஜா, மூன்றாம் பரிசு ப. ஷாரணி ஆகியோர் பெற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 6000, இரண்டாம் பரிசு ரூ. 4500, மூன்றாம் பரிசு ரூ. 3500 வழங்கப்படுகிறது. இப்போட்டியில் முதலிடம் பெற்ற ஐந்து இளைஞர்கள் மாநில கலைப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu