ரெட் அலெர்ட் எதிரொலி: சென்னை விரையும் பேரிடர் மீட்பு படை
சென்னைக்கு வரும் அக்.16-ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மற்றும் புறநகர், நெல்லை, தூத்துக்குடி. கள்ளக்குறிச்சி உள்பட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடங்கி உள்ளது. சென்னையில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். அக்.15,16-ல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பருவமழையை எதிர்கொள்வதற்கான ரெட் அலர்ட் முன்னெச்சரிக்கை: சென்னை விரையும் பேரிடர் மீட்பு படைமுன்னேற்பாடுகளுடன் அரசு தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் முருகானந்தம் அவசர கடிதம், மழை பாதிப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
வானிலை பற்றிய முன்னறிவிப்பு, நிகழ்நேர தகவல், கள நிலவரத்தை அறிய, வாட்ஸ்அப் குழுவில் சேர - மேற்கு (GCP), இந்த எண்ணை தொடர்புக் கொள்ளவும்(99947 90008) - சென்னை காவல்துறை இணை ஆணையர், விஜயகுமார் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu