சென்னையில் பெயர் பலகை விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சென்னையில் பெயர் பலகை விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு
X
Chennai Accident Today- சென்னை கத்திப்பாராவில் வழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Chennai Accident Today- சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் வழிகாட்டி பலகை நேற்று திடீரென அடிமட்டத்தோடு பெயர்ந்து விழுந்தது. பரபரப்பு நிறைந்த சாலையில் வழிகாட்டி பலகை திடீரென பெயர்ந்து விழுந்ததால் அப்பகுதியாக சென்ற பேருந்து வேன், ஆட்டோ மற்றும் இரு சக்கரத்தை வாகனங்கள் மீது விழுந்து பலத்த சேதம் அடைந்தது.

அத்துடன் வேன் ஒன்றும் கவிழ்ந்தது. இரு சக்கர வாகனத்தில் வழியே சென்ற நபரின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழிகாட்டி பலகை விழுந்து காயமடைந்த சண்முகசுந்தரம் என்பவர் கோமா நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story