டெல்லி போலீஸ் எனக்கூறி சுமார் 34 லட்சம் வரை மோசடி-மூன்று பேர் கைது

சென்னையை சேர்ந்த சிலர் டெல்லி போலீஸ் எனக்கூறி சுமார் 34 லட்சம் வரை மோசடி - மூன்று பேர் கைது
சென்னையை சேர்ந்த சிலர் டெல்லி போலீஸ் என கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி சைபர் கிரைம் போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணமாக இருந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் சென்னை விரைந்து வந்து சென்னை மாங்காட்டை சேர்ந்தவர் ராம்குமார், கொளத்தூரை சேர்ந்தவர் கேப்ரியேல் ஜோசப் திருச்சியைச் சேர்ந்தவர் தினோசந்த் ஆகிய மூன்று பேரும் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் மொபைல் & கம்யூட்டரில் பலான படங்களை பார்க்கும் நபர்களின் ஐடியை கண்டுபிடித்து அவர்களிடம் டெல்லி காவல்துறை போல் பேசி டெல்லி காவல்துறையின் லோகோவை பயன்படுத்தி நீங்கள் செய்த குற்றத்திற்கு 3000 முதல் 4000 வரை அபராதம் கட்ட வேண்டும் எனக்கூறி பலரை ஏமாற்றி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அப்படி தவறும் பட்சத்தில் காவல்துறை உங்கள் வீடுகளுக்கு வந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என ஏமாற்றி சுமார் 34 லட்சம் வரை மோசடி செய்த நபர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடத்தில் கைது செய்திருக்காய்ங்க.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu