எழும்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு தீபாவளி கிப்ட் பாக்ஸ்
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள், தடுப்பூசி அனைவரும் செலத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கோடு ஒவ்வொரு சிறப்பு முகாமிலும் பல புதுவகையான யுக்திகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த ராயபுரம் மண்டலத்தில், மாநகராட்சி அதிகாரிகள் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தீவிர பணிகளை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னையில் நேற்று 1,600 இடங்களில் 7-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில், பொதுமக்களின் ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில், ராயபுரம் மண்டல உதவி சுகாதார அதிகாரி டாக்டர் வேல்முருகன் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ்பாண்டியன் தலைமையில், முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
மாநகராட்சியின் இந்த புதுமையான நடவடிக்கை மக்களின் பாராட்டை பெற்று வருகிறது. இதனால் தடுப்பூசி போட மக்கள் ஆர்வத்துடன் முகாமில் குவிந்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி சார்பில் கூறியதாவது:-
ராயபுரத்தில் தொடக்கத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் இருந்தது. தற்போது தடுப்பூசி உள்ளிட்ட தொடர் நடவடிக்கையின் மூலம், அங்கு முழுமையாக பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.
ராயபுரம் மண்டலத்தில் 5 லட்சத்து 21 ஆயிரத்து 876 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாக இருக்கின்றனர். அதில் 80 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
விரைவில் 100 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மண்டலமாக ராயபுரம் உருவாகும். தடுப்பூசியை மக்களிடையே ஊக்குவிப்பதற்குதான் இது போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu