கோடம்பாக்கத்தில் வாடிக்கையாளர் சேவை மையம்: பிஎஸ்என்எல் தொடங்கியது

கோடம்பாக்கத்தில் வாடிக்கையாளர் சேவை மையம்: பிஎஸ்என்எல்  தொடங்கியது
X
கோடம்பாக்கத்தில் வெளிப்பணி வாடிக்கையாளர் சேவை மையத்தை பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் தொடங்கி வைத்தார்.

கோடம்பாக்கம் தொலைபேசி இணைப்பகத்தில் வெளிப்பணி வாடிக்கையாளர் சேவை மையத்தை பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் டாக்டர் வி.கே.சஞ்சீவி நேற்று தொடங்கி வைத்தார். வாடிக்கையாளர் ஒருவருக்கு புதிய சிம் விநியோகத்தின் மூலம் இதற்கான விழாவையும் அவர் தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் ஊழியர் நல பொது மேலாளர், மேற்கு மண்டல பொது மேலாளர், கோடம்பாக்கம்/கே.கே.நகர் துணை பொது மேலாளர்கள், பிஎஸ்என்எல் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஊழியர்களையும், விற்பனையாளர்களையும் பாராட்டிய தலைமை பொது மேலாளர் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story