பிரதமர் நரேந்திர மோடியை போன்றவர்கள் நாட்டுக்கு தேவை -நடிகர் பாக்யராஜ்

பிரதமர் நரேந்திர மோடியை போன்றவர்கள் நாட்டுக்கு தேவை -நடிகர் பாக்யராஜ்
X
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்-எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வி அடையும் பாக்யராஜ்

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று திரைப்பட நடிகரும் கோலிவுட்டில் நடக்கும் எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வி அடையும் முன்னாள் இயக்குநருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை போன்றவர்கள் நாட்டுக்கு தேவை அப்படீன்னும் பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்றும் திரைப்பட நடிகரும் கோலிவுட்டில் நடக்கும் எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வி அடையும் முன்னாள் இயக்குநருமான பாக்யராஜ் பேசியுள்ளார்.

"பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022" அப்படீங்கற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடந்துச்சு. நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட, திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பாக்யராஜ்,"அண்ணாமலை இங்கிருந்து கர்நாடக சென்று சிறப்பாக பணியாற்றியதாக சொன்னார்கள். நான் கர்நாடகா சென்றிருந்த போது அவரைப்பற்றி பெருமையாக பேசியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது பாராட்டப்பட வேண்டியது.

பாஜகவுக்கு சரியான ஆளைத்தான் தலைவராக போட்டிருக்கிறார்கள். பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தை பெறுவதை நான் பாக்கியமாக கருதுகிறேன். பிரதமரை வெளிநாடு செல்கிறார் என குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் இத்தனை நாடுகளுக்கு ஓய்வில்லாமல் எப்படி செல்கிறார் ? அவர் உடலை எப்படி வைத்துக் கொள்கிறார் என பார்ப்பேன். இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை. இக்கட்டான சூழல் வரும் போது சமாளிப்பது ரெம்ப ரெம்ப கஷ்டம். எப்படி சென்றாலும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். இத்தகையவர்களை போன்றவர்கள் நல்லவற்றையும் பேசமாட்டான், பிறர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது" அப்படீன்னு பேசியதைக் கேட்டு அரங்கில் இருந்த பாஜக-வினரே அரண்டு போய் விட்டார்களாம்.

Next Story