லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரணை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆஜர்

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரணை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆஜர்
X

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில்  நேரில் விசாரணைக்கு சென்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர்.

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும்,தனது அமைச்சர் பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்தது. அதன்படி அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறையினர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீது தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் எம் ஆர் விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி கடந்த வாரம் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்மனை பெற்றுக்கொண்ட எம்ஆர் விஜயபாஸ்கர் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆகி உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!