சென்னையில் முகக்கவசம் அணியாமல் திரிந்த 6,372 பேர் மீது வழக்கு பதிவு

சென்னையில் முகக்கவசம் அணியாமல் திரிந்த 6,372 பேர் மீது வழக்கு பதிவு
X

கோப்பு படம்

சென்னையில், முகக்கவசம் அணியாத 2010 நபர்கள் மீது, கடந்த 4 நாட்களில் 6,372 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுப்பதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 15 மண்டல அமலாக்க குழுவினர், கடந்த 16ம் தேதி முதல்பெருநகரின் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட தீவிர கொரோனா தடுப்பு சோதனை நடத்தப்பட்டது. இதில், முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் மீது 2,010 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் அபராதம் ரூ.4,02,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில், மண்டல அமலாக்க குழுவினர் சோதனையில் 6,372 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.12,74,400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!