தமிழகத்தில் இன்று புதிதாக 1432 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக 1432 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

தமிழகத்தில் இன்று புதிதாக 1432 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 25 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1,432 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுவரை பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,72,843-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,707-ஆக உள்ளது.

கொரோனாவிலிருந்து இன்று ஒருநாளில் மட்டும் 1,519 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,20,499-ஆக உயர்நதுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,44,832 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!