தமிழகத்தில் இன்று புதிதாக1,359 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக1,359 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

தமிழகத்தில் இன்று புதிதாக 1,359 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 20 பேர் இறந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று ஒரநோளில் மட்டும் புதிதாக 1,359 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 26,75,592 பேர் கொரோன தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர்.

இன்று ஒரு நாளில் மட்டும் 20 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.. இதனால் இதுவரை 35,754 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 16 பேரும், தனியார் மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்தனர்.

கொரோனாவிலிருந்து 1,473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 26,23,459 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,42,864 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!