பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப்பணி: 75 டன் கழிவு அகற்றம்
தூய்மைப்பணி மேற்கொண்டவர்களை நேரில் சந்தித்து பாராட்டிய, மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்குட்பட்ட பகுதிகளில் , சுமீத் உர்பேசர் நிறுவனத்தின் மூலம் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிரது. இப்பணிகளை, அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடற்கரை தூய்மை பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள், மாணவர்கள் உட்பட 3000 பேர் கலந்துக்கொண்டு, அவர்களின் மூலம் 75 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டன. இப்பணியில் ஈடுபட்டு, கடற்கரையில் இருந்து அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் (சுகாதாரம்) மனீஷ், தெற்கு வட்டார துணை ஆணையாளர் சிம்ரஞ்சித் சிங் உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu