மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்

மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்
X

மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற தமிழக பாஜக வின் மாநில தலைவர் எல். முருகனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஒன்றிய மீன்வளம் , கால்நடை ,பால்வளத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் உங்களது பணி அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ஒன்றிய இணை அமைச்சர்.எல். முருகன் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் நல்குவதாகத் தெரிவித்தார்.

Tags

Next Story
ai solutions for small business