சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்தார் முதல்வர்
X

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று சென்னை, சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு, இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்தார்.


உடன், உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கோஸ், மஸ்தான், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான த. இனிகோ இருதயராஜ், மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அய்யாவழி சமயத் தலைவர் பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளார், மந்தைவெளி பள்ளிவாசல் தலைமை இமாம் கே.எம். இல்யாஸ் ரியாஜி மற்றும் கிறிஸ்துவ தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்