திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டம்
X

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டம் 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான இன்று, காலை 7:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 22ம் தேதி கருட சேவை உற்சவம் நடந்தது. 23ம் தேதி சூரிய, சந்திர பிரபை புறப்பாடு நடந்தது. 24ம் தேதி பல்லக்கு நாச்சியார் கோலத்தில், சுவாமி புறப்பாடு நடந்தது.

ஆறாம் நாள் விழாவான நேற்று, காலை 5:15 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, ஆனந்த விமானத்தில் பார்த்தசாரதி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு, யானை வாகன புறப்பாடு நடந்தது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான இன்று, தேர் திருவிழா நடைபெற்றது. அதை முன்னிட்டு, இன்று அதிகாலை, பார்த்தசாரதி பெருமாள் சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இதில் கலந்துகொண்டு தேரோட்டம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!