தமிழகத்தில் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி: முதலமைச்சர் உறுதி!

தமிழகத்தில் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி: முதலமைச்சர் உறுதி!
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாது. விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள குறிப்பில், கொரோனா ஊரடங்கால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

அதற்காக மாதம் 2 ஆயிரம் வீதம் இரு மாதங்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது. 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட உள்ளது.

ஆனால் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே செல்ல முடியாது. கொரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மக்களை காக்கும் மகத்தான பணியில் என்னை நான் ஒப்படைத்துள்ளேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தேவை. தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!