/* */

பள்ளி பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு: அமைச்சர் அன்பில் மகேஷ்!

பள்ளிகளில் இருந்து வரும் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

HIGHLIGHTS

பள்ளி பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு: அமைச்சர் அன்பில் மகேஷ்!
X

அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதிகாரிகளுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு வரைவு அறிக்கை தயாராக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுக்கு பிறகு முறையாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுப்பதற்காக புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை செய்ய அறிவுறுத்தப்படும்.

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர், மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளது.

பள்ளிகளில் எழும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும். ஏற்கனவே விசாகா கமிட்டி உள்ளது. பெண் ஆசிரியர் ஒருவர் இதற்கு தலைமை வகிப்பார்.

விசாகா கமிட்டி அனைத்து பள்ளிகளிலும் உள்ளதா? செயல்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.

Updated On: 27 May 2021 6:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன் பறக்கத் தடை