முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனி இணையதளம் தொடக்கம்!

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனி இணையதளம் தொடக்கம்!
X

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க உருவாக்கப்பட்ட இணையதளம்

தமிழக முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்தினார். பின்னர் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்னும் பரப்புரையில் பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்க 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று கூறினார்.

அதன்படி திமுக தலைமையில் ஆட்சி அமைந்ததும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்கிற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறை சார்பில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இதன் அடுத்தக்கட்ட நகர்வாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடன் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து புகார்களை தெரிவிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் ஒன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in எனும் இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் குறைகள், பகுதியில் உள்ள குறைகள், புகார்களை தெரிவிக்கலாம்.

#public #lodge #complaints #Chief Minister #separate #website #Launch #முதலமைச்சரிடம் #பொதுமக்கள் #புகார்அளிக்க #தனி #இணையதளம் #தொடக்கம் #newwebsite #people,

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!